உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் முக்கு ரோட்டில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. முதுகுளத்துார்--பரமக்குடி ரோடு விளங்குளத்துார் பஸ் ஸ்டாப் அருகே ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மன்ற தலைவி சண்முகவள்ளி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பொன்ராஜ் திறந்து வைத்தார். பஸ்ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் நலன் கருதி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. உடன் பொருளாளர் முனீஸ்வரி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ