உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் ரயில் துாக்கு பாலம் திறப்பு இன்று முதல் நிறுத்தம்

பாம்பன் ரயில் துாக்கு பாலம் திறப்பு இன்று முதல் நிறுத்தம்

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துாக்கு பாலம் பொருத்திட, இன்று (ஏப்.5) முதல் பழைய துாக்கு பாலம் திறக்கப்படாது. இப்பணி முடிந்ததும் ஜூனில் சோதனை ஓட்டத்திற்கு புதிய துாக்கு பாலம் திறக்கப்பட உள்ளது.பாம்பன் கடலில் ரூ. 535 கோடியில் 2 கி.மீ., ல் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் 1.5 கி.மீ.,க்கு கட்டுமான பணி நுாறு சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 500 மீ., ல் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாலம் நடுவில் துாக்கு பாலம் பொருத்தப்பட உள்ளது. பாம்பன் கடற்கரையில் 700 டன் எடையுள்ள துாக்கு பாலம் வடிவமைக்கும் பணி முடிந்து மார்ச் 12 முதல் நிலுவையில் உள்ள 500 மீ., துாரம் பாலம் வழியாக துாக்கு பாலத்தை ரயில்வே ஒப்பந்த பொறியாளர்கள் நகர்த்தி செல்கின்றனர். நேற்று வரை 80 மீ., துாரத்திற்கு நகர்த்தி உள்ளனர்.இம்மாதம் இறுதியில் துாக்கு பாலத்தை புதிய பாலத்தில் பொருத்த உள்ளதால், இரு பாலம் நடுவில் உள்ள கடலில் தற்காலிக துாண்கள் அமைக்க உள்ளனர். இதனால் இன்று முதல் பழைய துாக்கு பாலம் திறக்கப்பட மாட்டாது எனவும், புதிய துாக்கு பாலம் பொருத்தியதும் ஜூனில் புதிய பாலத்தில் சோதனை ஓட்டத்திற்காக பாலம் திறக்கப்படும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ