உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூலை 7ல் பழனிசாமி பரமக்குடி வருகிறார்

ஜூலை 7ல் பழனிசாமி பரமக்குடி வருகிறார்

பரமக்குடி: -ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் நடந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஜூலை 7ல் பரமக்குடி வருகிறார். இதையடுத்து நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் முத்தையா முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் ஜமால் வரவேற்றார். ஜூலை 7 காலை 9:00 மணிக்கு பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லுார் பகுதியில் பிரம்மாண்ட கட்சி கொடியை பழனிசாமி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து காலை 10:00 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் முத்தையா மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் என மாவட்டச் செயலாளர் முனியசாமி தெரிவித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை