உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 3 நாளில் துாக்கு பாலம் அமைப்பு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 3 நாளில் துாக்கு பாலம் அமைப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில் பாலம் நடுவில் 3 நாட்களுக்குள் துாக்கு பாலம் நிறுவப்படும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முழுவீச்சில் நடக்கிறது. இந்நிலையில் பாம்பன் கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட 700 டன் துாக்கு பாலம் ஏப்.12ல் நகர்த்தி செல்லப்பட்டு நேற்று இரு பாலம் நடுவில் பாதி அளவில் கொண்டு செல்லப்பட்டது. இன்னும் 3 நாட்களில் துாக்கு பாலம் இரு பாலம் நடுவில் முழுமையாக நிறுவப்படும். இதன் பின் பாலத்தை தொழில் நுட்பத்துடன் பொருத்தும் பணி நடக்கும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி