உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துணை ராணுவ அணி வகுப்பு

துணை ராணுவ அணி வகுப்பு

முதுகுளத்துார், : ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு நடந்தது.முதுகுளத்தூர் டி.எஸ்.பி., சின்னக்கண்ணு தலைமை வகித்தார். மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை எஸ்.ஐ., பவன்குமார் முன்னிலை வகித்தார். முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் துவங்கி வடக்கூர், பஜார், பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக தாலுகா அலுவலகம் வரை 58 துணை ராணுவ வீரர்கள், 65 போலீசார் துப்பாக்கி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.பொதுமக்கள் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் துரைப்பாண்டி, இளங்கோவன் பெரியார், வீரம்மாள், முன்னாள் ராணுவ வீரர்கள் கருப்புசாமி, ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை