உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி வகுப்பறை கூரை சேதம் சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

பள்ளி வகுப்பறை கூரை சேதம் சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடி தொடக்கப்பள்ளியில் வகுப்பறையில் சேதமடைந்த கூரையை சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியல் 198 மாணவர்கள் படிக்கின்றனர். 2022ல் கட்டப்பட்ட இரு வகுப்பறைகளில் கூரை சேதமடைந்துள்ளது. மழை பெய்தால் நீர்கசிவு ஏற்படுகிறது.கோடை விடுமுறை காலத்தில் வகுப்பறை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். இது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ