உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாசிபட்டினம் தர்கா கொடியிறக்கம்   

பாசிபட்டினம் தர்கா கொடியிறக்கம்   

தொண்டி: தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நெய்னா முகமது தர்கா கொடியிறக்கம் நடந்தது. தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நெய்னா முகமது தர்கா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஜூலை 11 இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 21ல் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. தொடர்ந்து தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் கலியநகரி, வட்டாணம், ஸ்தானிகன்வயல், எஸ்.பி.பட்டினம், மருங்கூர் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தர்கா வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி