உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளிர் சாதனத்தில் வழியும் நீரால் நோயாளிகள் அவதி

குளிர் சாதனத்தில் வழியும் நீரால் நோயாளிகள் அவதி

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் ரேடியாலஜி பிரிவில் டாக்டர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கான குளிர்சாதன இயந்திரத்தில் தண்ணீர் வழிந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் மழை நேரங்களில் ஜன்னல் வழியாக நீர் வார்டு கட்டடங்களுக்குள் புகுந்தது.இதனை கழிவு நீர் செல்லும் குழாய்களில் விழும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப்பணிகள் இன்னும் நடக்கிறது. எக்ஸ்ரே பிரிவிற்கான கட்டடம் உள்ள பகுதியில் கழிவு நீர் குழாய்கள் செல்வதால் அந்தப்பகுதியில் உள்ள சுவர்களில் நீர் ஊற்றெடுத்து வெளியேறியது. அதனை இன்று வரை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இதனால் எக்ஸ்ரே பிரிவு பழைய கட்டடத்தில் செயல்படுகிறது. தற்போது ரேடியாலஜி பிரிவில் ஸ்கேன் எடுக்கும் பகுதியில் டாக்டர்கள் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான குளிர் சாதன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.இதிலிருந்து நீர் வழிந்து கட்டத்தின் தரையில் தேங்குவதால் நோயாளிகள் தரையில் தண்ணீர் தெரியாமல் வழுக்கி விழுகின்றனர். அனைத்து தளங்களிலும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் நடமாட முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை