உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்

பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாதம் பிறப்பு, பவித்ரோத்ஸவ திருவிழா நடந்தது.பரமக்குடி சவுந்தரவள்ளி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு காலை, மாலை சிறப்பு நெய்வேத்தியம் படைக்கப்பட்டு தீபாராதனைகள் நடக்கிறது. இதன்படி ஆண்டு முழுவதும் சுவாமிக்கு ஏதேனும் பூஜைகளில் தடைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ரோத்ஸவ விழா கொண்டாடப்படுகிறது.தொடர்ந்து 5ம் நாளில் ஆக.19ல் கருட வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். நேற்று ஆவணி பிறப்பையொட்டி காலை 6:00 மணிக்கு திருப்பாவை பாடப்பட்டது. கோ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வைஷ்ணவ சபையினர் பாராயணம் ஜெபித்தபடி கோயிலை வலம் வந்தனர்.

வரதராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை

எமனேஸ்வரத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. தொடர்ந்து ஆடி 5-வது வெள்ளிக்கிழமையையொட்டி காலையில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மாலை தாயார் சன்னதியில் உள்ள மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் பெருமாள், தாயார் மலர் பந்தலில் அலங்காரமாகினர். பின்னர் நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ