உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லாரிகளில் ஏர்ஹாரன்கள் திடீர் சத்தத்தால் மக்கள் பதட்டம்

லாரிகளில் ஏர்ஹாரன்கள் திடீர் சத்தத்தால் மக்கள் பதட்டம்

திருவாடானை: வாகனங்களில் ஏர் ஹாரன்களை பொருத்தி அதிக ஒலி எழுப்புவதால் குடியிருப்பு பகுதியில் மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.திருவாடானை, தொண்டி பகுதியில் நெரிசல் மிகுந்த தெருக்களில் சில வாகன டிரைவர்களின் செயல் பதட்டத்தையும், விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன.சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்க விட்டு போக்குவரத்தில் பதட்டம் ஏற்படுத்துகின்றனர்.இதே போல் இளைஞர்கள் ஆல்டர் சைலன்சர் என்ற பெயரில் அதிக ஒலி எழுப்பும் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்கின்றனர். திடீரென எழும் அதிக சத்தத்தால் ரோட்டில் செல்லும் பிற வாகன ஓட்டுநர்களும், ரோட்டோரத்தில் நடந்து செல்பவர்களும் பதறி கீழே விழும் அளவுக்கு இந்த ஒலிச்சத்தம் இருக்கிறது.மருத்துவமனைகள், பள்ளிகள் அமைந்துள்ள பகுதியிலும் இந்த விதிமீறல் உள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி குறிப்பிட்ட அளவு ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.வட்டார போக்குவரத்து துறையினர் இது குறித்து எவ்வித ஆய்வும் நடத்துவதில்லை. இதனால் விதிமீறல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து அதிக ஒலி எழுப்பும் வாகன ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை