உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில்  கிராமப்புற மாணவர்களுக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  வேண்டும்

ராமநாதபுரத்தில்  கிராமப்புற மாணவர்களுக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  வேண்டும்

ராமநாதபுரம், : -ராமநாதபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என சட்டசபை மனுக்கள் குழுவிற்கு வழக்கறிஞர் முருகபூபதி மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் மாவட்டம் தொழில் துறையிலும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாவட்டம். இங்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. ராமநாதபுரம் நகரை சுற்றிலும் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.தினமும் பல ஆயிரம் மாணவர்கள் கிராமங்களிலிருந்து ராமநாதபுரம் நகருக்கு வந்து செல்கின்றனர். ராமநாதபுரத்தில் மேல்நிலைக்கல்வி வழங்குவதற்கு போதுமான கல்வி நிறுவனங்கள் இல்லை. அரசு உதவி பெறும் 5 பள்ளிகளில் 3 மட்டுமே ஆண்கள் பள்ளி, 2 பள்ளிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக உள்ளது. கிராமங்களிலிருந்து மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவு அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படுவதில்லை. பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகராட்சி அரசுப்பள்ளி என்பதால் பெண்களுக்கு பிரச்னை இல்லை. மாணவர்கள் மட்டுமே விரும்பிய மேல்நிலைக்கல்வி பயில முடியாமல் தவிக்கின்றனர். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, சட்டக்கல்லுாரி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் நகரில் மாணவர்களுக்கு 6 முதல் பிளஸ்--2 வரை படிப்பதற்கான அரசுப்பள்ளி இல்லாமல் உள்ளது. நடப்பு 2024 --25 கல்வியாண்டு முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை துவக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை