உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூலை 30க்குள் பாம்பனில் புதிய துாக்கு பாலம் பொருத்த திட்டம்

ஜூலை 30க்குள் பாம்பனில் புதிய துாக்கு பாலம் பொருத்த திட்டம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ஜூலை 30க்குள் புதிய ரயில் பாலத்தில் துாக்கு பாலத்தை பொருத்த ரயில்வே பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கி.மீ.,ல் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முழுவீச்சில் நடக்கிறது. இதில் 1.6 கி.மீ.,ல் பாலம் பணி முடிந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில் மீதமுள்ள 500 மீ., பாலத்தின் நுழைவில் துாக்கு பாலம் வடிவமைத்த பிப்.,ல் நகர்த்தப்பட்டு தற்போது இரு பாலம் இணையும் இடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இரு பாலம் நடுவில் கடலில் இரும்புத் துாண்கள் அமைக்கப்பட்டு அதனை சரி பார்க்கும் பணியில் ரயில்வே பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 30க்குள் துாக்கு பாலத்தை இரு பாலம் நடுவில் பொருத்த திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ