உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு வாடிக்கையாளர்கள் அவதி

பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு வாடிக்கையாளர்கள் அவதி

திருவாடானை: திருவாடானை பகுதியில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு, அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லை.ஜெனரேட்டரை இயக்க ஆட்கள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.திருவாடானை பாரதிநகரில் பி.எஸ்.என்.எல்., டவர் அமைத்துள்ளனர். இந்த அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் வருவதில்லை. மின்சாரம் உள்ள போது இயங்கும் டவர் சேவை, மின்சாரம் துண்டிக்கும் போது ஜெனரேட்டரை இயக்க ஆட்கள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., சேவை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல்., இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. சேவை பாதிப்பால் இ-சேவை மையங்களில் வருமானம், இருப்பிடம், வாரிசு என பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.திருவாடானை அலுவலகத்திற்கு சென்றால் பூட்டியுள்ளது. யாரை தொடர்பு கொள்வது என்ற விபரம் தெரியவில்லை. எனவே இப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை