மேலும் செய்திகள்
ஆடி மாதம் என்பதால் 'டல்' பஸ்கள் இயக்கம் குறைப்பு
03-Aug-2024
ராமநாதபுரம் : -ராமநாதபரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் தள்ளு மாடல் பஸ்களால் பயணிகள், பணிபுரியும் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகம் புறநகர் கிளையில் 60 பஸ்களும், நகர் கிளையில் 68 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதில் தற்போது புதிய பஸ்கள் வந்திருந்தாலும் காலாவதியான தள்ளு மாடல் பஸ்களும் இருக்கின்றன. ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து சாத்தான்குளம் செல்லும் 26 ம் வழித்தட பஸ்ஸ்டார்ட் ஆகாததால் டிக்கெட் பரிசோதகர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தள்ளு மாடல் பஸ்களை தள்ளி விட்டு இயக்கி வருகின்றனர். இந்நிலையில் செப்., மாதத்தில் 3 பஸ்கள் இயக்கும் காலம் நிறைவு பெறுகிறது. இதனை கண்டம் செய்துவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும்.தொடர்ந்து தள்ளு மாடல் பஸ்களாக இருப்பதால் எப்போது பஸ் நிற்கும் என்ற அச்சத்தில் பணிபுரிகின்றனர். எனவே தள்ளு மாடல் பஸ்களை கண்டம் செய்துவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும். தள்ளு மாடல் பஸ்களை தள்ளுவதற்கு ஆள் பிடிக்க முடியாமல் ஊழியர்களும் தள்ளாடுகின்றனர்.---
03-Aug-2024