ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
ராமநாதபுரம்: மத்திய அரசின் புதிய 3 சட்டங்களை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ேஷக் இப்ராஹிம், செயலாளர் கருணாகரன், துணைத்தலைவர் மாதவன், பொருளாளர் பாபு, துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன. வழக்குகளுக்காக நீதிமன்றம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.-* திருவாடானை கோர்ட் முன்பு வக்கீல்கள் மனித சங்கிலி மற்றும் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அறப்போராட்டம் வெற்றி பெற அனைத்து வக்கீல்கள் சங்கத்துடன் வக்கீல்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினர்.