உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூறாவளியால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை

சூறாவளியால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை

ராமேஸ்வரம்:சூறாவளிக் காற்று வீசுவதுடன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்க கடலில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் சூறாவளிக் காற்று வீசுவதுடன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகின்றன.இச்சூழலில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றால் மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படும் என்பதால் இப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 2000 விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி