| ADDED : ஜூலை 23, 2024 05:08 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலுமாணிக்கம் செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் 3 நாட்கள் நடந்தது.இதில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு விடுதி மாணவர்கள் மற்றும் புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் அணியினர் பங்கேற்றனர். இதில் ராமநாதபுரம் விளையாட்டு விடுதி மாணவர்கள் அணி முதலிடம் பெற்றனர். திண்டுக்கல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி அணியினர் இரண்டாமிடம் பெற்றனர்.வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார், மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் கிழவன் சேதுபதி,மாவட்ட சதுரங்க சங்கத்தின் உப தலைவர் சுந்தரம் மற்றும் ஹாக்கிச்சங்க பொறுப்பாளர்கள்சுரேஷ், ரமேஷ், ரமேஷ்பாபு, சரவணன், சவேரியார், நடுவர்கள் திண்டுக்கல் ராமானுஜம் பங்கேற்றனர்.போட்டி ஏற்பாடுகளை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் இணைச் செயலாளர் தாமரைக்கண்ணன் செய்திருந்தார்.