உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை சிறையில் வாடும் தந்தை, இரு மகன்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

இலங்கை சிறையில் வாடும் தந்தை, இரு மகன்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

ராமேஸ்வரம் :ஜூலை 23ல் ராமேஸ்வரத்தில் இருந்து செல்வக்குமார் என்பவர் விசைப்படகில் ஹரிகிருஷ்ணன் 50, அவரது மகன்கள் பொன்ராஜ் 26, ராம்குமார் 24, உள்ளிட்ட 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.அன்றாட செலவுக்கு சிரமப்பட்ட ஹரிகிருஷ்ணன்பட்டதாரி மகன்களை மீன்பிடிக்க அழைத்துச் சென்றுஉள்ளார். அதன் மூலம் குடும்பச்சுமையை குறைக்கலாம் என கருதிய நிலையில் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டது ஹரிகிருஷ்ணன் மனைவி சுமித்ராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சுமித்ராவுக்கு ராமேஸ்வரம் துறைமுகம் விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் தலைவர் போஸ் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரூ. 5000 மதிப்பு சமையல் பொருட்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி