கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கோரிக்கை
கீழக்கரை : கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை ஜெட்டி பாலம் அருகே நகராட்சி நிர்வாகத்தால் ஐந்து கழிப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 2015ல் மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் கீழக்கரை நகரில் கழிப்பறை வளாகம் அமைக்கப்பட்டது.தற்காலிக கழிப்பறை வளாகம் எவ்வித பராமரிப்பும் இல்லாததால் மத்திய அரசு ஒதுக்கிய நிதி வீணடிக்கப்பட்டது. பொதுமக்கள் கூறியதாவது:கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகின்றனர். இந்நிலையில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க ஒதுங்குகின்றனர்.அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க இப்பகுதியில் அத்தியாவசியமாக கழிப்பறை வளாகம் தேவையாக உள்ளது. எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நிதி ஒதுக்கீடு செய்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான சமுதாய கழிப்பறை வளாகம் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.