உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நம்புதாளையில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கோரிக்கை

நம்புதாளையில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க கோரிக்கை

ராமநாதபுரம் : திருவாடானை தாலுகா நம்புதாளை கிராம மக்கள் கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர், மீன்பிடி இறங்கு தளம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் விஜய் தலைமையில் வழக்கறிஞர் திருமுருகன் முன்னிலையில் நம்புதாளை கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அதில் நம்புதாளை கிராமத்தல் 10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். ஊரின் முக்கிய பிரச்னையாக தெற்கு ஓடையில் நேரடியாக கடலில் இருந்து வரக்கூடிய நீரின் வலது புறம் 100 வீடுகள் உள்ளன. சுனாமி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.தெற்கு ஓடை ஆற்று வாய்க்காலில் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பையை கொட்டுகின்றனர். சுகாதாரக்கேட்டால் மக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே கடல் அரிப்பை தடுக்க படகுகுளை பாதுகாக்கவும், தடுப்புச்சுவர், மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும். இடதுபுறம் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல வசதியாக சிறிய பாலம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ