உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆனந்துார் பெரிய ஊருணியில் முள்செடிகளை அகற்ற கோரிக்கை

ஆனந்துார் பெரிய ஊருணியில் முள்செடிகளை அகற்ற கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் சிவன் கோயில் அருகில் பெரிய ஊருணி அமைந்துள்ளது. இதன் கரையில் வளர்ந்துள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும்.ஆனந்துார் சிவன் கோயில் அருகில் பெரிய ஊருணியில் தேங்கும் தண்ணீர் மக்கள் குளிப்பது, கால்நடைகளில் தாகம் தீர்க்கவும் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஊருணி முறையாக பராமரிக்கப்படாததால் ஊருணியைச் சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருவதுடன் காற்றில் அடித்துச் செல்லப்படும் குப்பை ஊருணி நீர் பகுதியில் தேங்குகின்றன.இதனால் ஊருணி நீர் மாசடைந்து வருகிறது. எனவே ஊருணியை பராமரித்து முட்செடிகள், குப்பையை அகற்றி சுற்றிலும் முள்வேலி அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ