உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை சிறையில் வாடும் மீனவரை மீட்டு தாருங்கள் * முதல்வரிடம் மீனவர்கள் மனு

இலங்கை சிறையில் வாடும் மீனவரை மீட்டு தாருங்கள் * முதல்வரிடம் மீனவர்கள் மனு

ராமேஸ்வரம்,:இலங்கை சிறையில் வாடும் 87 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், ராயப்பன் உட்பட பலர் வலியுறுத்தினர்.இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம் மாவட்டங்களில் இருந்து ஜூன் 18 முதல் ஜூலை 23 வரை மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 83 பேரையும், அவர்களின் 14 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து உள்ளனர். இம்மீனவர்கள் மற்றும் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுள்ள 4 மீனவர்கள் உள்ளிட்ட 87 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2018 முதல் தற்போது வரை 180 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் இலங்கை வசம் உள்ளன. இப்படகுகளை இழந்து தவிக்கும் மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மார்ச் 1ல் இலங்கை நீதிமன்றம் விடுவித்த 13 படகுகளை மீட்டு வர இலங்கை செல்ல அனுமதி பெற்றுத் தர வேண்டும்.இந்திய, இலங்கை மீனவர்கள் மற்றும் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தங்கச்சிமடம், பாம்பன் குந்துகாலில் துாண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும். ஆழ்கடல் படகிற்கு வங்கியில் வழங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ