உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அலைபேசி டவருக்கு எதிர்ப்பு

அலைபேசி டவருக்கு எதிர்ப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் தெருவில்500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு குறைந்த மின் அழுத்தத்தால் வீடுகளில் உள்ள பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, பேன் இயக்க முடியாமல் மக்கள் அவதிப்படுவதுடன் அடிக்கடி மின் சாதன பொருட்கள் பழுதாகி விடுகிறது. இதனை கண்டித்து இப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று இப்பகுதியில் தனியார் அலைபேசி டவர் அமைக்க உபகரணங்களுடன் ஊழியர்கள் வந்தனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அலைபேசி டவருக்கு நேரடியாக மின்சாரம் வழங்காமல் டிரான்ஸ்பார்மர் அமைத்து வழங்க வேண்டும் என கோரி ஊழியர்களை தடுத்து முற்றுகையிட்டனர்.இதன் பின் மின் வாரிய அதிகாரிகள் மக்களை சமரசம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை