உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு டவுன் பஸ்களில் தேய்ந்த டயர்களால் விபத்து அபாயம்; பராமரிப்பில் மெத்தனம்

அரசு டவுன் பஸ்களில் தேய்ந்த டயர்களால் விபத்து அபாயம்; பராமரிப்பில் மெத்தனம்

திருப்புல்லாணி: ராமநாதபுரம் நகர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் தேய்ந்து போன நிலையில் டயருடன் பஸ்கள் ஓடுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.ஓட்டை உடைசலுடன் ஓடும் டவுன் பஸ்களால் அதிக வேகத்தில் செல்லும் போது அதன் முழு கட்டுமான அமைப்பும் ஆட்டம் காண்கிறது. இதனால் அரசு டவுன் பஸ்கள் ஓட்டும் டிரைவர்கள் 40 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்வதில்லை.பெரும்பாலான இடங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் பிரேக் டவுன் ஆகிவிடுகிறது. படிக்கட்டு உடைந்து விழுகிறது. மழைக்காலங்களில் டவுன் பஸ்களின் கூரையில் மழை நீர் உள்ளே கசிந்து பயணிகளின் மீது விழுகிறது. திருப்புல்லாணியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., மாவட்ட முன்னாள் தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:கிராமங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் உள்ள டயர்களில் பட்டன் தேய்ந்து வழுக்காக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் உரிய நேரத்தில் பிரேக் பிடிக்க முடியாமல் விபத்து அபாயம் நிலவுகிறது.குறுகிய சாலைகளில் பயணிக்கும் அரசு டவுன் பஸ்கள் வழி விடுவதற்காக ஒதுங்கும் போது முறையான கண்ட்ரோல் கிடைக்காததால் கவிழும் அபாயம் ஏற்படுகிறது. எனவே ஓட்டை உடைசல் ஆன பஸ்களை நீக்கிவிட்டு அதற்கு பதில் முறையாக பராமரிப்புச் செய்யப்படும் பஸ்களை கிராமங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை