உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் பாதிப்பு

ராமேஸ்வரத்தில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் பாதிப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நகராட்சி தார் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் நகராட்சி சல்லிமலை தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இத்தெருவில் உள்ள தார் ரோடு வழியாக கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் புறவழி ரோடாக உள்ளது.மேலும் உள்ளூர் வாசிகள் டூவீலர் மற்றும் ஆட்டோக்கள் செல்வதால் இது பிரதான ரோடாக பயன்படுத்தப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த ரோடு பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.இதில் வாகனங்கள் ஓட்ட முடியாமல் வெளியூர் டிரைவர்கள், உள்ளூர் மக்கள் திணறுகின்றனர்.வாகனத்தில் டயர்கள் வெடித்து சேதமடைகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.எனவே ரோட்டை சீரமைக்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை