உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இருள் சூழ்ந்து காணப்படும் ரோஜ்மா நகர் கடற்கரை

இருள் சூழ்ந்து காணப்படும் ரோஜ்மா நகர் கடற்கரை

சாயல்குடி: -சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரோஜ்மாநகரில் மன்னார் வளைகுடா கடற்கரை அமைந்துள்ளது.இங்கு கடற்கரையோர பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மூன்றாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் காட்சிப் பொருளாகவே உள்ளது.தெருக்களில் முறையாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பை கடலோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் காற்றின் வேகத்தால் குப்பை பறந்து கடலில் விழுவதால் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பை சந்திக்கின்றன.எனவே கன்னிராஜபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்