உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பங்கு வர்த்தகத்தில் லாபம் ஆசைகாட்டி தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி

பங்கு வர்த்தகத்தில் லாபம் ஆசைகாட்டி தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி

ராமநாதபுரம்:-பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை காட்டி ராமநாதபுரம் தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மெகராஜ் 41. இவர் ரியல் எஸ்டேட், ஆன் லைனில் பங்கு வர்த்தக தொழில் செய்து வருகிறார். இவரது அலைபேசி வாட்ஸ்-அப்பில் பேசிய மர்ம நபர் பிரபலமான பங்கு வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வருவதாவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவித்துள்ளார்.இதனை நம்பிய மெகராஜ் மர்ம நபர் அனுப்பிய வாட்ஸ்-ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உறுப்பினராக ரூ.20 ஆயிரம் செலுத்தி சேர்ந்துள்ளார். மெகராஜ் மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் 30 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பியுள்ளார்.பங்கு வர்த்தகத்தில் லாபம் அதிகமாக சேர்ந்த நிலையில் பணத்தை எடுக்க மெகராஜ் முடிவு செய்த போது அந்த வங்கி கணக்கை மர்ம நபர்கள் முடக்கி வைத்திருந்தனர். முழுப்பணத்தையும் எடுக்க பெரிய தொகை கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதனால் சுதாரித்தவர் மோசடி கும்பல் குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். சந்தீஷ் எஸ்.பி., உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் உடனடியாக மர்ம நபர்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்தனர்.அதில் 27 லட்சத்து 33 ஆயிரத்து 833 ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இந்த வங்கி கணக்கை முடக்கி அதில் உள்ள பணத்தை மீட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி