உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் அருகே கண்மாயில் மணல் திருட்டு: நீர்நிலைகள் பாதிப்பு

முதுகுளத்துார் அருகே கண்மாயில் மணல் திருட்டு: நீர்நிலைகள் பாதிப்பு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே நல்லுக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஒன்பதாம்புலி கண்மாயில் மணல் திருட்டால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறினர்.முதுகுளத்துார் அருகே நல்லுக்குறிச்சி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம்,கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்தில் உள்ள ஒன்பதாம்புலி கண்மாயில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி 50 ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் கண்மாய் தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளது. கடந்த சிலநாட்களாகவே ஒன்பதாம் புலி கண்மாயில் சிலர் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.நல்லுக்குறிச்சி விவசாயிகள் கூறியதாவது: கண்மாயில் மணல் திருட்டால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்போது உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. கரைகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.முதுகுளத்துார் தாசில்தார் சடையாண்டி கூறுகையில், போலீசார் மூலம் ஒன்பதாம்புலி கண்மாயில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ