உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டாறு ஆற்றுப்படுகை அருகே மணல் திருட்டு: விவசாயிகள் கவலை

குண்டாறு ஆற்றுப்படுகை அருகே மணல் திருட்டு: விவசாயிகள் கவலை

கமுதி : கமுதி அருகே நாராயணபுரம் கிராமம் குண்டாறு ஆற்றுப்படுகை அருகே விவசாய நிலங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கமுதி அருகே நாராயணபுரம் கிராமத்தில் குண்டாறு ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள நிலங்களில் சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். சீமைக் கருவேலம் வளர்ந்த நிலையில் சிலர் தரிசாக விட்டுள்ளனர். இந்நிலையில் வியாபார நோக்கில் சிலர் சீமைக்கருவேல் மரங்களை அகற்றி இரவு நேரங்களில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நிலத்தில் மணல் திருடப்பட்டு சமன் செய்வதற்காக சவடுமணல் கொட்டி மூடி விடுகின்றனர். விவசாய நிலம் முழுவதும் பாதிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் மணல் திருட்டில் ஈடுபடுவது குறித்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே நாராயணபுரம் கிராமத்தில் குண்டாறு ஆற்றுப்படுக்கை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை