உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொளுத்தும் கோடை வெயிலால் துாய்மை பணியாளர்கள் தவிப்பு

கொளுத்தும் கோடை வெயிலால் துாய்மை பணியாளர்கள் தவிப்பு

திருவாடானை, : வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் துாய்மைப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்து வீடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சியில் நிரந்தரமாக 14 பேர், தற்காலிகமாக 30 பேர் என துாய்மை பணியாளர்கள் உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். காலை 6:45 முதல் மதியம் 2:30 மணி வரை இவர்கள் பணி செய்யும் நிலையில் தற்போது வெயிலின் தாக்கத்தால் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே பணிகளை விரைந்து முடித்து வீடு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.சில பணியாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கத்தால் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.வயதானவர்களால் குப்பையில் இருந்து வரும் வெப்பம், துர்நாற்றம்,மூச்சு திணறலை ஏற்படுத்தும் வாயுக்களில் இருந்து தாக்குப்பிடிக்க முடிவதில்லை. இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே பணி நேரத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்தளர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்