உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்  பணி செய்யும் துப்புரவு தொழிலாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்  பணி செய்யும் துப்புரவு தொழிலாளர்கள்

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே பாதாள சாக்கடையில்அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடைப்பை சரி செய்யும் பணியில் ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் கையுறை கூட இல்லை. கால்களில் பாதுகாப்பு காலணிகள் அணியவில்லை. இது போல் பணிபுரியும் போது துப்புரவு தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற நேரங்களில் விஷ வாயுக்கள் தாக்கவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான முகக் கவசம் துப்புரவு தொழிலாளர்களிடம் இல்லை.துப்புரவு தொழிலாளர்களிடம் கேட்ட போதுகையுறைகள் வழங்கினால் அது விரைவில் கிழிந்து விடுகிறது. பணிகளை விரைவாக செய்ய முடியவில்லை. எந்த பாதுகாப்பு உபகரணங்களும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. வேறு வழியின்றி இது போன்ற பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். துப்புரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ