உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் ஆட்ட நாயகனாக சந்தீஷ் எஸ்.பி., தேர்வு 

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் ஆட்ட நாயகனாக சந்தீஷ் எஸ்.பி., தேர்வு 

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகனாக(மேன் ஆப் தி மேட்ச்) ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ்தேர்வு செய்யப்பட்டார்.ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் பொதுமக்கள்நல்லுறவு கிரிக்கெட் போட்டி நடந்தது.போட்டியை கலெக்டர்விஷ்ணுசந்திரன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட போலீஸ்அணியும், ஊர்க்காவல்படை அணியும் மோதின.20 ஓவர்கள்கொண்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மாவட்ட போலீஸ் அணியில் எஸ்.பி., சந்தீஷ், திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர். போலீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது.எதிர்த்து ஆடியஊர்க்காவல் படை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் போலீஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக எஸ்.பி., சந்தீஷ் தேர்வுசெய்யப்பட்டார். அவர் 20 பந்துகளில் 25 ரன்னும், 4 ஓவர் பந்து வீசியதில்13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ