உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செபஸ்தியார் சர்ச் தேர் பவனி விழா

செபஸ்தியார் சர்ச் தேர் பவனி விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி புனித செபஸ்தியார் சர்ச் விழா பிப்.20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடுகளும், திருப்பலியும் நடந்தன. முக்கிய விழாவான கடைசி நாளில் பங்கு பாதிரியார் ராஜமாணிக்கம் தலைமையில் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவில் தேர் பவனி விழா நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலா வந்த செபஸ்தியாரை பெண்கள் தெருக்களில் மாக்கோலம் இட்டு வரவேற்று பிரார்த்தனை செய்தனர். விழாவில், சிவகங்கை மறை மாவட்ட பிஷப் ஆனந்தம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொக்கூரணி பங்கு கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை