உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  தன்னார்வலர்களுக்கு தேர்வு 

இல்லம் தேடி கல்வி திட்டத்தில்  தன்னார்வலர்களுக்கு தேர்வு 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் இல்லம் தேடி கல்வி 2.0 புதிய வாழ்விடங்களில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 33 தன்னார்வலர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் இணைய வழித்தேர்வு நடந்தது.இல்லம் தேடி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஜே.லியோன் ஆகியோர் மாவட்டம் முழுவதும் இணைய வழி தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ராமநாதபுரம் ஒன்றியம் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வுக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சோபனா, வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செந்துார் முருகன், உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர் கல்பனாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.போகலுார், நயினார்கோவில், திருப்புல்லாணி, பரமக்குடி, கமுதி, கடலாடி ஆகிய ஒன்றியங்களில் தேர்வு நடந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புதிய மையங்களில் தன்னார்வலர்களாக செயல்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ