உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயில் 48ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையடுத்து செல்லி அம்மனுக்கு வருடாபிஷேகம் மற்றும் புண்ணியதானம் நடந்தது. காலை கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜை, பூர்ணஹூதி பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டு ராமேஸ்வரம் மற்றும் வைகையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்திற்கு ஊற்றப்பட்டது. பின்பு அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம் நடந்தது.தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர். மாலை முதுகுளத்துாரில் ஊர் வளைந்து காப்பு கட்டப்பட்டது. கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்ட பின் பால்குடம், அக்னி சட்டி, பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.ஜூலை 16ல் 2008 விளக்கு பூஜை, ஜூலை 19ல் அக்னி சட்டி, ஜூலை 20ல் பால்குடம், அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி, ஜூலை 21ல் அலகு, வேல் குத்தி பூக்குழி இறங்குதல், பூப்பல்லாக்கு வீதி உலா, ஜூலை 22ல் முளைப்பாரி கங்கையில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 3000த்திற்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை