சுற்றுலா பாலம் அமைக்க அக்னி கடலில் மண் ஆய்வு
ராமேஸ்வரம்,: -ராமேஸ்வரத்தில் சுற்றுலா படகிற்கு புதிய கான்கிரீட் பாலம் அமைக்க சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் அக்னி தீர்த்த கடலில் மண் பரிசோதனையில் ஈடுபட்டனர்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் தமிழ்நாடு கடல்சார் கழகம் சார்பில் தனியார் சுற்றுலாப் படகு சவாரி உள்ளது. இங்குள்ள படகு நிறுத்தும் பாலம் மரக்கட்டையில் அமைத்த பாலமாக உள்ளது. இதனை சிமென்ட் கலவையுடன் கூடிய கான்கிரீட் பாலம் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி இக்கடலில் உள்ள மண்ணின் காரத்தன்மை, அதற்கேற்ப கட்டுமானம் அமைக்க மண் பரிசோதனை செய்ய சென்னை ஐ.ஐ.டி.,யிடம் அரசு வலியுறுத்தியது.இதையடுத்து நேற்று ஐ.ஐ.டி., பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அக்னி தீர்த்த கடலில் மண் பரிசோதனை செய்ய மிதவை இரும்பு வளைவு அமைத்தனர். இன்று முதல் (செப்.3) கடலில் 20 முதல் 30 அடி ஆழத்தில் துளையிட்டு மண்ணை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.