உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தென் மாவட்ட அளவில் சிலம்ப போட்டி

தென் மாவட்ட அளவில் சிலம்ப போட்டி

கமுதி: கமுதி அருகே பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் தமிழர்களின் பாரம்பரிய கலையை பாதுகாக்கும் வகையில் தென் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். டி.எஸ்.பி.,சின்னக்கண்ணு, முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5 முதல் 19 வயது வரை உள்ள 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.மாணவர்களின் தனித்திறமை, குழு திறமை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, பேராசிரியர், மாஸ்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ