உள்ளூர் செய்திகள்

ஆன்மிக சொற்பொழிவு

சாயல்குடி : தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தை மாத முழு நிலவு ஆன்மிகப் பெருவிழா சாயல்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்தது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிந்தனை மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை வகித்தார். சாயல்குடி முக்குலத்தோர் உறவின்முறை சங்கத்தின் தலைவர் ராமர், செயலாளர் பச்சம்மாள், பொருளாளர் சுப்ரமணியன், கமுதி தேவர் கல்லுாரி பேராசிரியர் நல்லதம்பி, வாகை பாண்டியன், வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர்.முக்குலத்தோர் உறவின்முறை இளைஞர் சங்க தலைவர் முருகன் வரவேற்றார். பா.ஜ., மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் சங்க நிர்வாகிகள் முனியசாமி, கருப்பையா, லிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.கோயிலில் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ