மேலும் செய்திகள்
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?
22-Oct-2024
முதுகுளத்துார்: கமுதி,முதுகுளத்துார் பகுதிகளில் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவையொட்டி முதுகுளத்துார், கடலாடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பசும்பொன் சென்று வர வசதியாக கிராமங்கள் தோறும் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள் அந்தந்த பகுதிக்கு இயக்கப்பட்டன. இதனால் முதுகுளத்துார், கமுதி பகுதியில் போலீசார் தங்கிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. மற்ற பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன.கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் ஒரு சில அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ் மட்டுமே இயங்கியதால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள், அரசு அதிகாரிகளும் தவித்தனர்.எனவே இன்று மாணவர்களின் நலனுக்காக முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
22-Oct-2024