உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டேராடூன் ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

டேராடூன் ராணுவ கல்லுாரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் : டேராடூனில் உள்ள ராணுவ கல்லுாரியில் சேர தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய ராணுவக் கல்லுாரியில் ஜூலை- 2025க்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பதாரார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.ஜூலை 2025 ல் பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2012 ஜூலை 2க்கு முன்பாகவும், 2014 ஜன.1-க்கு பிறகும் பிறந்திருக்கக் கூடாது. அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 7 ம் வகுப்பு படிப்பவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு 2024 டிச.1ல் நடைபெற உள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர் சென்னை--600 003 என்ற முகவரிக்கு செப்.30க்குள் அனுப்ப வேண்டும்.விபரங்களுக்கு www.rimc.gov.in என்ற ராணுவக் கல்லுாரி இணையதளம் மற்றும் ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை 04567--230 045 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை