மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
4 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
4 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
4 hour(s) ago
ராமநாதபுரம்: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் நீந்தி மகிழ்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு ஏப்.1 முதல் ஜூன் 3 வரை நடக்கிறது. 8 வயதிற்கு மேல் உள்ள சிறுவர்களுக்கு ரூ.1500 உடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும்.தற்போது கோடை கால வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் பலர் நீச்சல் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். அடுத்த கட்டமாக மே 10 முதல் 21 வரை, மே 23 முதல் ஜூன் 3 வரை என தலா 12 நாட்கள் வீதம் நீச்சல் பயிற்சி முகாம் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் 99766 91417 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago