உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தற்காப்புகலை உபகரணங்களை பயன்படுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

தற்காப்புகலை உபகரணங்களை பயன்படுத்தி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

முதுகுளத்துார் : தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சீர்காழியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் தனிநபர், குழு உலகசாதனை நிகழ்ச்சியாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கர்லாக்கட்டை, குத்து வரிசை, சுருள்வாளால் பத்து மணி நேரம் சுழற்சிமுறையில் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.இதில் ராமநாதபுரம், திருப்பூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் புலி முருகன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் சிலம்பம், குத்துவரிசை, சுருள்வாள் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி சுழற்சி முறையில் தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். மாணவர்களுக்கு ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாணவர்களை மாஸ்டர் முருகன், பெற்றோர்கள், மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி