உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனியார் மருத்துவமனை, திருமண மண்டபத்தில் சப்-கலெக்டர் ஆய்வு

தனியார் மருத்துவமனை, திருமண மண்டபத்தில் சப்-கலெக்டர் ஆய்வு

பரமக்குடி, - பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் திருமண மண்டபங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் ஆய்வு மேற்கொண்டார்.பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனை மற்றும் தனியார் இடங்களில் கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகளால் பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் சரிபார்க்கப்பட்டது.ஆய்வின் போது தாசில்தார் சாந்தி, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் ஐயப்பன், ஆர்.ஐ., வேம்புராஜ், வி.ஏ.ஓ., பாலன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ