உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போஸ்ட் ஆபீஸ் ரோடு ஆக்கிரமிப்பால் அவதி

போஸ்ட் ஆபீஸ் ரோடு ஆக்கிரமிப்பால் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் போஸ்ட் ஆபீஸ் ரோடு அமைந்துள்ளது. இங்கு தலைமை தபால் நிலையம், ஓட்டல்கள், காய்கறி கடைகள் உள்ளன. எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த ரோட்டில் நாளுக்கு நாள் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.குறிப்பாக டூவீலர்களை கண்டபடி நிறுத்துகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ