உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆவின் பால் கிடைக்காததால் அவதி

ஆவின் பால் கிடைக்காததால் அவதி

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் ஆவின் பாலகத்தில் காலை 5:00 முதல் 6:30 மணி வரை சென்று ஆவின் பால் கேட்டால் டெலிவரி கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.இதனால் வாடிக்கையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர் சாயல்குடி சேர்ந்த வாடிக்கையாளர் பாஸ்கரன் கூறியதாவது:சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆவின் பாலகம் கடைக்கு சென்று காலையில் பால் கேட்டால் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய பால் தாமதமாக டெலிவரி செய்கின்றனர் என்று கூறுகின்றனர். பால் பொருட்கள் விற்பனைக்கு பதிலாக ஆவின் கடையிலேயே பாலுக்கு மொத்தமாக டீ போட்டு விடுகின்றனர்.ஆனால் எல்லா நேரமும் டீக்கடையாக செயல்படுகிறது. அரசு ஆவின் பாலகத்தில் பால் கிடைக்காததால் தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்க இதர கடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி சாயல்குடியில் தடை இல்லாமல் அரசு ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை