உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூசையப்பர் சர்ச் தேர் பவனி

சூசையப்பர் சர்ச் தேர் பவனி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெளியக்கோட்டை கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலய தேர்ப்பவனி விழா நடைபெற்றது. ஏ.ஆர்.மங்கலம் பங்கு பாதிரியார் அன்பரசு, சம்பை பங்கு பாதிரியார் செல்வகுமார் ஆகியோர் திருவிழா கூட்டுத் திருப்பலி நடத்தினர்.முன்னதாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பர் வீதி உலா வந்தார்.முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த சூசையப்பரை வரவேற்கும் விதமாக பெண்கள் வீடுகளில் முன்பும் தெருக்களிலும் மாக்கோலம் இட்டு வரவேற்றனர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை