தாசில்தார் பொறுப்பேற்பு
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் இல்லாததால் முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்கள், குடும்பத் தலைவருக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாலை விபத்துக்கள் தொடர்பான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.மேலும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் உள்ளிட்டவைகளில் பெறப்படும் மனுக்கள் மீதும் நடவடிக்கையின்றி பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சில தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக உமா மகேஸ்வரி நியமிக்கப்பட்டார்.