உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி தெலுங்கானா வாலிபர் சைக்கிள் பயணம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி தெலுங்கானா வாலிபர் சைக்கிள் பயணம்

ராமநாதபுரம்:தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சி.ஹச். சிவாகோட் 28, சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 50,000 கி.மீ., சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.தெலுங்கானா சித்திபேட் மாவட்டம் கஜ்வெல் பகுதியைச்சேர்ந்த டிப்ளமோ படித்தவரான சி.ஹச்.சிவாகோட் , மரங்கள், தண்ணீர், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஜதராபாத்தில் இருந்து இந்தியா முழுவதும் சைக்கிளில் 50,000 கி.மீ., சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று ராமநாதபுரம் வந்த அவர் கூறியதாவது:மே 28 ல் ஜதராபாத்தில் பயணத்தை துவங்கினேன். ஆந்திரா, நெல்லுார், திருப்பதி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு ராமேஸ்வரத்திற்கு செல்கிறேன்.அங்கிருந்து திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் சென்று கேரளா செல்ல உள்ளேன். ஒரு நாளைக்கு 100 முதல் 120 கி.மீ., பயணம் செய்கிறேன். 50,000 கி.மீ., நாடு முழுவதும் செல்ல உள்ளேன். இரவு நேரத்தில் கோயில் வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கி ஓய்வெடுக்கிறேன்.நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும். நீர்நிலைகள், தண்ணீரை மாசுப்படுத்தகூடாது. பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறேன். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி