மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிஷேகம்
10-Mar-2025
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வள்ளிமாடன் வலசையில் உள்ள பூரண புஷ்கலா, இலங்குமணி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. காலை 9:35 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.மூலவர்கள் பூரண புஷ்கலா, இலங்குமணி அய்யனார், மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
10-Mar-2025