உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காதைக் கிழிக்கும் ஏர்ஹாரன்; வாகனங்களில் பயன்பாடு ஜோர்

காதைக் கிழிக்கும் ஏர்ஹாரன்; வாகனங்களில் பயன்பாடு ஜோர்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தடையை மீறி டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர்ஹாரன்களை வாகன ஓட்டிகள் பலர் பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.மோட்டார் வாகன சட்டப்படி 80 டெசிபிள் அளவிற்கு மேல் ஒலிப்பான்காளை பயன்படுத்த கூடாது. இதன்படி பஸ், லாரி, வேன், ஆட்டோ,டூவீலர்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தக் கூடாது. மீறி பொருத்தியிருந்தால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் தடையை மீறி டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக டூவீலர்களில் அலறும் இசை ஆகிய 'மல்டி டோன்' ஏர் ஹாரன் பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது போலீசார், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை